தலைமை ஆசிரியர் மீது போக்சோ வழக்கு
தலைமை ஆசிரியர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சிவகங்கை
தேவகோட்டை,
தேவகோட்டை பகுதியில் உள்ள ஒரு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவிகள் 2 பேர் சரிவர பள்ளிக்கு வரவில்லை. பொதுத்தேர்வும் எழுதவில்லை. இது குறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் வசந்தகுமாருக்கு புகார் சென்றது. அவர் மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். பின்னர் மாணவிகள் தேவகோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். தாங்கள் படித்த பள்ளியில் பணியாற்றும் தலைமை ஆசிரியர் வெங்கடேசன்(வயது 59) பாலியல் தொல்லை கொடுத்ததாக புகாரில் கூறி இருந்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரியா, தலைமை ஆசிரியர் வெங்கடேசன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
Related Tags :
Next Story