திருமயம் தாசில்தாரை மிரட்டியதாக 10 பேர் மீது வழக்குப்பதிவு


திருமயம் தாசில்தாரை மிரட்டியதாக 10 பேர் மீது வழக்குப்பதிவு
x

மாவூரில் உள்ள கல்குவாரிக்கு சோதனைக்கு சென்ற திருமயம் தாசில்தாரை மிரட்டியதாக 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை

திருமயம்:

தாசில்தாருக்கு மிரட்டல்

திருமயம் அருகே மாவூர் பகுதியில் அனுமதியின்றி கல்குவாரி செயல்பட்டு வருவதாக திருமயம் தாசில்தார் பிரவீனா மேரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற தாசில்தார் அனுமதியின்றி செயல்பட்ட கல்குவாரி குறித்து அங்கு பணியில் இருந்த நபர்களிடம் விசாரணை நடத்தினார்.

அப்போது சிவகங்கை மாவட்டம், பள்ளத்துரை சேர்ந்த கரு ராஜ்குமார் தலைமையில் 10 பேர் கொண்ட கும்பல் தாசில்தாரை மிரட்டும் பாணியில் பேசியதாகவும், மேலும் சிலர் தாசில்தாரை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்ப போவதாக அந்த கும்பல் கூறியதாக தெரிவித்தனர். மேலும் அவரை பணி செய்யவிடாமலும் தடுத்துள்ளனர்.

10 பேர் மீது வழக்கு

இதுகுறித்து திருமயம் போலீஸ் நிலையத்தில் தாசில்தார் பிரவீனாமேரி புகார் கொடுத்தார். அதன்பேரில் திருமயம் போலீசார் தாசில்தாரை பணி செய்ய விடமால் தடுத்ததாக கூறி கரு ராஜ்குமார் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அனுமதியின்றி செயல்படும் கல்குவாரியை தடை செய்வது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக திருமயம் தாசில்தார் பிரவீனா மேரி தெரிவித்தார்.


Next Story