போக்குவரத்து விதிகளை மீறிய 1,416 பேர் மீது வழக்குப்பதிவு
போக்குவரத்து விதிகளை மீறிய 1,416 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 14-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் உத்தரவிட்டார். அதன் பேரில் சட்டம் ஒழுங்கு பிரிவு போலீசாரும், ஆயுதப்படை போலீசாரும் மாவட்டம் முழுவதும் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டனர்.
தணிக்கையின் போது மது அருந்திவிட்டு இருசக்கர வாகனத்தில் சென்றதாக 124 வழக்குகளும், ஹெல்மெட் அணியாமல் சென்றதற்காக 1,138 வழக்குகளும், 2-க்கு மேற்பட்டோர் இருசக்கர வாகனத்தில் சென்றதற்காக 124 வழக்குகளும் சிறுவர்கள் இருசக்கர வாகனத்தை ஓட்டியதாக 5 வழக்குகளும், உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டியதாக 25 வழக்குகளும் என மொத்தம் 1,416 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story