2 பேர் மீது வழக்குப்பதிவு
பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர்
சிவகாசி,
சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையம் எல்லைக்கு உட்பட்ட செங்கமலப்பட்டி ரோட்டில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் நேற்று முன்தினம் மாலை வேதிப்பொருள் ரசாயன மாற்றம் அடைந்து வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அந்த ஆலையின் 8-வது அறை தரைமட்டமானது. அருகில் இருந்த 2 அறைகள் சேதமானது. இதில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இதுகுறித்து நாரணாபுரம் கிராம நிர்வாக அலுவலர் ரேவதி சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் பட்டாசு ஆலையின் உரிமையாளர் பாலாஜி பாவநாசம், போர்மென் கணேசன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
Related Tags :
Next Story