வாகன விதிமுறைகளை மீறிய 200 பேர் மீது வழக்குப்பதிவு


வாகன விதிமுறைகளை மீறிய 200 பேர் மீது வழக்குப்பதிவு
x

வாகன விதிமுறைகளை மீறிய 200 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கரூர்

வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தலைமையிலான போலீசார் நொய்யல் பகுதியில் உள்ள மூலிமங்கலம் பிரிவு சாலை, கரூர் -சேலம் தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் விபத்தை தடுக்கும் விதமாக திடீர் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது கரூரிலிருந்து சேலம் நோக்கி வந்த அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது குடிபோதையில் வாகனம் ஓட்டியது, சீட் பெல்ட் அணியாமல் வந்தது உள்பட வாகன விதிமுறைகளை மீறிய 200 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் ஹெல்மெட் அணியாமல், உரிய சான்றுகள் இன்றி வாகனங்களை ஓட்டி வந்தால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பி வைத்தனர்.


Next Story