20 மோட்டார் சைக்கிள்களில் சாகசம் செய்த 45 பேர் மீது வழக்குப்பதிவு
20 மோட்டார் சைக்கிள்களில் சாகசம் செய்த 45 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
திருச்சி
திருச்சியில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மத்திய பஸ்நிலையம் அருகே உள்ள அவரது முழு உருவ சிலைக்கு நேற்று முன்தினம் பல்வேறு கட்சியினர், சங்கங்கள் மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சிக்கு வந்தவர்களில் 45 இளைஞர்கள் 20 மோட்டார் சைக்கிள்களில் ஆரவாரத்துடன் தலைகவசம் அணியாமல் தலைமை தபால் நிலைய பகுதியில் அதிக சப்தத்துடன் வீலிங் செய்து சாகசம் செய்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், 45 வாலிபர்கள் மீது கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story