பெண்கள் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு


பெண்கள் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 24 May 2023 12:15 AM IST (Updated: 24 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நாகப்பட்டினம்

சிக்கல்:

நாகை அருகே சிக்கல் ஊராட்சி கீழவெளி கிராமத்தில் குடிநீர் வழங்கக்கோரி நேற்று முன்தினம் நாகை- திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் சிக்கல் பஸ் நிறுத்தம் முன்பு காலிகுடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள், கீழ்வேளூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலந்து சென்றனர். இந்த சாலை மறியலால் நாகை-திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட சிக்கல் ஊராட்சி கீழவெளி கிராமத்தை சேர்ந்த சேகர், பிரேம்நாத், சிவக்குமார், பிரபாகரன், சங்கர் மற்றும் 3 பெண்கள் உள்பட 8 பேர் மீது கீழ்வேளூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story