மருமகளை அரிவாளால் வெட்டிய மாமனார் மீது வழக்குப்பதிவு
மருமகளை அரிவாளால் வெட்டிய மாமனார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி
உப்பிலியபுரம், ஜூலை.5-
உப்பிலியபுரம் அருகே உள்ள பச்சைமலை தென்புறநாடு ஊராட்சி பெரியசித்தூர் கிராமத்தை சேர்ந்தவர். செல்லத்துரை (வயது 35). இவரது மனைவி ராதிகா (33). சம்பவத்தன்று ராதிகாவுக்கும், அவரது மாமனார் மாணிக்கம் (60) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மாணிக்கம் அரிவாளால் மருமகள் ராதிகாவின் வலது காலை வெட்டினாராம். இதில் பலத்த காயம் அடைந்த ராதிகா திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து. உப்பிலியபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் விசாரணை நடத்தி மாணிக்கம் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.
Related Tags :
Next Story