'மாமன்னன்' சினிமாவுக்கு தடை கேட்டு வழக்கு-மதுரை ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை


மாமன்னன் சினிமாவுக்கு தடை கேட்டு வழக்கு-மதுரை ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை
x

‘மாமன்னன்' சினிமாவுக்கு தடை கேட்டு வழக்கு மதுரை ஐகோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வருகிறது

மதுரை


நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த மணிகண்டன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடித்த மாமன்னன் படத்தை மாரிசெல்வராஜ் இயக்கியுள்ளார். அந்த படம் வருகிற 29-ந்தேதி (அதாவது நாளை) வெளியாகிறது. இந்த படத்தில் இரு சமுதாயத்தினருக்கு இடையேயான பிரச்சினைகளை கதைக்களமாக உருவாக்கி, இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் வெளியானால் தமிழகத்தில் பல்வேறு சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அதை தவிர்க்கும் வகையில் மாமன்னன் படத்துக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு மதுரை ஐகோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வருகிறது.


Related Tags :
Next Story