கண்புரை பரிசோதனை முகாம்


கண்புரை பரிசோதனை முகாம்
x

கே.வி.குப்பம் அருகே கண்புரை பரிசோதனை முகாம் நடந்தது.

வேலூர்

கே.வி.குப்பம்

கே.வி.குப்பம் அருகே மாச்சனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், பார்வை இழப்பு தடுப்பு சங்கம், மாச்சனூர் ஊராட்சி மன்றம், தனியார் மருத்துவமனை ஆகியவை சார்பில் கண்புரை பரிசோதனை முகாம் நடைபெற்றது.

ஊராட்சி மன்ற தலைவர் உத்தரகுமார் தலைமை தாங்கினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பெருமாள், மாவட்ட கவுன்சிலர் அசோக்குமார், ஒன்றிய குழு உறுப்பினர் தாமோரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தலைமை ஆசிரியர் கே.மகேந்திரன் வரவேற்றார்.

மாச்சனூர் பகுதிகளை சேர்ந்த நோயாளிகளுக்கு மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்தனர்.


Next Story