சுவரில் கார் மோதி கேட்டரிங் உரிமையாளர் பலி


சுவரில் கார் மோதி   கேட்டரிங் உரிமையாளர் பலி
x

களியக்காவிளை அருகே சுவரில் கார் மோதி கேட்டரிங் உரிமையாளர் பரிதாபமாக இறந்தார்.

கன்னியாகுமரி

களியக்காவிளை,

களியக்காவிளை அருகே சுவரில் கார் மோதி கேட்டரிங் உரிமையாளர் பரிதாபமாக இறந்தார்.

கேரளாவை சேர்ந்தவர்

கேரள மாநிலம் திருவனந்தபுரம் ஒற்றசேகரமங்கலம் அவியம்கோடு பகுதியை சேர்ந்தவர் தாஸ். இவரது மகன் லிஜின் தாஸ் (வயது25). கேட்டரிங் தொழில் நடத்தி வந்தார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் மகன் அனீஷ் குமார் (33) என்பவரும் குமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்திற்கு சமையல் வேைலக்கு சென்றனர்.

பின்னர் இருவரும் நேற்று காலையில் காரில் வீட்டுக்கு புறப்பட்டனர். காரை லிஜின் தாஸ் ஓட்டி சென்றார்.

சுவரில் மோதியது

அந்த கார் களியக்காவிளை அருகே உள்ள புத்தன்சந்தை- மூவோட்டுகோணம் சாலையில் கல்லாம்பொற்றை பகுதியில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. ஒரு கட்டத்தில் கார் அந்த கார் சாலையோரம் இருந்த வீட்டின் சுற்றுச்சுவரில் பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது.

இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த லிஜின் தாஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவருடன் இருந்த அனீஷ்குமார் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந் தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து பளுகல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுவரில் கார் மோதி கேட்டரிங் உரிமையாளர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story