சாலை விபத்தில் மாட்டு வியாபாரி பலி
கரூர் அருகே சாலை விபத்தில் மாட்டு வியாபாரி பரிதாபமாக இறந்தார். வாலிபர் படுகாயம் அடைந்தார்.
கரூர் மாவட்டம், குளித்தலை பாரதி நகரை சேர்ந்தவர் சண்முகம் (வயது 56). மாட்டு வியாபாரி. இவர் சம்பவத்தன்று கரூர் ஆண்டாள் நகர் அருகே தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியாக கடலூர் மாவட்டம், சிதம்பரம் தில்லை காளியம்மன் நகரை சேர்ந்த கோகுல்ராஜ் (25) என்பவர் ஓட்டி மற்றொரு மோட்டார் சைக்கிள்,சண்முகம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிள்களில் இருந்து தூக்கி வீசப்பட்ட 2 பேரும் படுகாயம் அடைந்தனர். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்த சண்முகத்தை கரூர் அரசு மருத்துக்கலூரி மருத்துவமனைக்கும், கோகுல்ராஜை கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர்.
இந்தநிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சண்முகம் பரிதாபமாக இறந்தார். கோல்குராஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து கரூர் டவுன் இன்ஸ்பெக்டர் விதன்குமார் வழக்குப்பதிந்து, சண்முகத்தை உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.