சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள்
சீர்காழி நகர் பகுதியில் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள் பிடித்து அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகர் பகுதியில் கால்நடைகள் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரிகின்றன. குறிப்பாக தென்பாதி, மயிலாடுதுறை சாலை, புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், தேர் மேலவீதி, வடக்குவீதி, பிடாரி வடக்கு வீதி, ஈசானிய தெரு, கொள்ளிடம் முக்கூட்டு, கடைவீதி, ரெயில்வே ரோடு, சிதம்பரம் சாலை, தாடாளன் கோவில் ஆகிய பகுதிகளில் மாடுகள் அதிக அளவில் சுற்றித்திரிக்கின்றன. இவைகள் சாலையில் செல்லும் மக்களை முட்டி கீழே தள்ளுகிறது. இதனால் பொதுமக்கள் சாலையில் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது. மேலும் சாலையில் செல்லும் கால்நடைகள் திடீரென சாலையின் குறுக்கே செல்வதால் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் சீர்காழி நகர் பகுதியில் வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும். மேலும் கால்நடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.