புளுதியூரில் வாரச்சந்தையில்ரூ.37 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை


புளுதியூரில் வாரச்சந்தையில்ரூ.37 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை
x
தினத்தந்தி 1 Jun 2023 10:30 AM IST (Updated: 1 Jun 2023 10:30 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

அரூர்

அரூர் அருகே உள்ள கோபிநாதம்பட்டி கூட்ரோடு புளுதியூரில் வாரந்தோறும் புதன்கிழமையில் கால்நடைகள் சந்தை நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று வாரச்சந்தை கூடியது. இந்த சந்தைக்கு தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருவண்ணமலை மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் ஆடுகள், கறவை மாடுகள், எருமை மாடு, கோழிகள் ஆகியவற்றை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இவற்றை வெளிமாநில மற்றும் தமிழத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் வாங்கி சென்றனர். நேற்று நடந்த சந்தையில் ரூ.37 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


Next Story