மாட்டுவண்டி தொழிலாளர்கள் போராட்டம்


மாட்டுவண்டி தொழிலாளர்கள் போராட்டம்
x

தஞ்சையில் உள்ள நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யூ. தஞ்சை மாவட்ட மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது

தஞ்சாவூர்
தஞ்சை சுற்றுலா மாளிகை பின்புறம் நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் முன்பு தஞ்சை மாவட்ட சி.ஐ.டி.யூ. மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு சி.ஐ.டி.யூ. மாநில செயலாளர் ஜெயபால் தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர் பேர்நிதியாழ்வார் முன்னிலை வகித்தார். போராட்டத்தில் மாட்டுவண்டி தொழிலாளர் சங்க நிர்வாகிகள் சோமசுந்தரம், பொன்னுசாமி, மூர்த்தி, முருகேசன், கோவிந்தராஜ் மற்றும் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.


மாட்டு வண்டிக்கு தனி குவாரி

போராட்டத்தில் பட்டுக்கோட்டை வட்டம், குறிச்சி அக்னி ஆற்றில், மாட்டு வண்டியில் மட்டும் மணல் எடுக்க தனி மணல் குவாரி அமைத்திட வேண்டும். மணல் சேமிப்பு கிடங்கிற்கு மணல் அள்ளி வைப்பதை அரசே ஏற்று நடத்த வேண்டும். லாரிக்கான மணல் குவாரியில் மாட்டு வண்டியில் மணல் எடுக்க 10 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை அனுமதிக்கப்படும் என்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.






Next Story