காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம்


காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம்
x

கள்ளக்குறிச்சியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்த நகரமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நகர மன்ற சாதாரண கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர மன்ற தலைவர் சுப்ராயலு தலைமை தாங்கினார். துணை தலைவர் ஷமீம்பானு அப்துல் ரசாக், நகராட்சி ஆணையர் குமரன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். கூட்டத்தில் நகர அமைப்பு ஆய்வாளர் தாமரைச்செல்வன், நகராட்சி பொறியாளர் முருகேசன், துப்புரவு ஆய்வாளர் சையத் காதர், பணி மேற்பார்வாளர் முகமது சுபேர், பணி ஆய்வாளர் கோபிநாத் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம்

கூட்டத்தில் கள்ளக்குறிச்சி நகர மக்களுக்கு ஏற்கனவே உள்ள குடிநீர் திட்டங்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் போதுமானதாக இல்லை. எனவே காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தை செயல்படுத்தி 63 லட்சத்து 13 ஆயிரம் லிட்டர் குடிநீரை வழங்க தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு கடிதம் அனுப்புவது, ஏமப்பேரில் உள்ள நகராட்சி குளத்தில் கழிவு நீர் கலக்காமல் இருக்க புதிய கால்வாய் அமைத்தல், மகாலட்சுமி நகரில் உள்ள நகராட்சி கிணற்றினை பழுது நீக்கம் செய்து அந்த பகுதிக்கு குடிநீர் வழங்குதல், நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் 124 தூய்மை பணியாளர்களின் பணிக்காலத்தை நீட்டிப்பு செய்தல் உள்ளிட்ட 31 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story