காவிரி குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்க வேண்டும்-கிராம மக்கள் கோரிக்கை
முதுகுளத்தூர் அருகே காவிரி குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முதுகுளத்தூர்,
முதுகுளத்தூர் அருகே வெங்கலகுறிச்சி கொசுக்குடி வழியாக செல்லும் சாலையில் பாலம் அமைக்கும் பணி கடந்த 3 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. பணி நடைபெறும் போது வெங்கல குறிச்சி பகுதியில் செல்லும் காவிரி கூட்டு குடிநீர் குழாய் சேதம் அடைந்தது. சேதம் அடைந்து ஒரு மாத காலம் ஆகியும் அந்த குழாய் இதுவரை சரி செய்யப்படவில்லை. இதுகுறித்து காவிரி கூட்டு குடிநீர் அலுவலரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் குடிநீர் தட்டு்ப்பாட்டால் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். இதனால் வெண்கல குறிச்சியில் இருந்து ஒரு கிலோமீட்டருக்கு மேல் தொலைவில் உள்ள புளியங்குடி செல்லும் விலக்கு ரோட்டிற்கு தள்ளுவண்டிகளுடன் பொதுமக்கள் வர வேண்டிய நிலை உள்ளது. அங்கு குடங்களில் தண்ணீர் பிடித்து கொண்டு கொளுத்தும் வெயிலில் ெபண்கள் வீட்டுக்கு செல்கிறார்கள். எனவே சேதமான காவிரி கூட்டுக்குடிநீர் குழாயை சரி செய்து தருமாறு வெங்கலகுறிச்சி கிராம மக்கள் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.