காவேரிப்பாக்கம் ஒன்றியக்குழு கூட்டம்


காவேரிப்பாக்கம் ஒன்றியக்குழு கூட்டம்
x

காவேரிப்பாக்கம் ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை

காவேரிப்பாக்கம் ஒன்றியக்குழு கூட்டம், ஒன்றியக்குழு தலைவர் அனிதா தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் முனியம்மாள், வட்டார வளர்ச்சி அலுவலர் தண்டாயுதபாணி ஆகியோர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் கர்ணாவூர், பன்னியூர், கல்பலாம்பட்டு, சேரி, மாகாணிப்பட்டு, வேடந்தாங்கல், சிறுவளையம், கூத்தம்பாக்கம், புதுப்பட்டு, புதூர், கீழ்வீராணம், ஓச்சேரி வேகாமங்கலம் ஆகிய ஊராட்சிகளில் மாணவர்கள் நலன் கருதி பழுதடைந்துள்ள அங்கன்வாடி கட்டிடம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம், ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி கட்டிடம் ஆகியவற்றை இடித்து அப்புறப்படுத்துவது, கரிவேடு ஊராட்சியில் வட்டார நாற்றங்கால் பண்ணை பணி மேற்கொண்டமைக்கு கரிவேடு ஊராட்சியில் போதிய நிதி இருப்பு இல்லாமையால் ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.4 லட்சத்து 35 ஆயிரம் வழங்குவது, 2022-2023-ம் ஆண்டு ஒன்றிய பொது நிதியின் கீழ் சிமெண்டு சாலை, கழிவுநீர் கால்வாய், பைப்லைன் அமைத்தல், நாடக மேடை, பேவர்பிளாக் சாலை அமைப்பது என்பது உள்பட 40 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சக்தி, மேலாளர் அனிச்சம், பொறியாளர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story