சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா


சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா
x

அரக்கோணம் டி.ஆர்.எஸ். குளோபல் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா

ராணிப்பேட்டை

அரக்கோணம்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் டி.ஆர்.எஸ். குளோபல் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் 2021-2022-ம் ஆண்டு சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

ஸ்ரீகிருஷ்ணா கல்வி குழு செயலாளர் டி.எஸ்.ரவிக்குமார் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் ஸ்வர்ணலதா முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் கிருஷ்ணா கல்வி குழு சேர்மன் லயன்.டாக்டர் டி.ஆர்.சுப்பிரமணியம் கலந்துகொண்டு பேசுகையில், மாணவர்களுக்கு வாழ்க்கையில் இன்றியமையாதது கல்வி மட்டுமே,.

அத்தகைய சிறப்பான கல்வியை அனைவரும் பெற்று, இந்த சமூகத்தில் ஒவ்வொருவரும் சிறந்த மாணவர்களாகதிகழ வேண்டும் என்ற எண்ணத்தினை மாணவர்களாகிய நீங்கள் இப்போதே மனதில் கொண்டு செயல்பட வேண்டும்.

உங்களின் லட்சியங்களை நீங்கள் நினைத்தது போலவே அடைந்து, வாழ்வில் உயர வாழ்த்தி மகிழ்கிறேன்' என்றார்.

தொடர்ந்து 100 சதவீத தேர்ச்சிக்கு காரணமாக இருந்த ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் பள்ளி முதல்வரை பாராட்டினார்.

ேமலும் பொதுத்தேர்வில் மாணவர்கள் என்.ஜீவா 486 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடமும், எஸ்.பி.தருண்குமார் 484 மதிப்பெண்கள் பெற்று 2-வது இடமும், பி.வி.மதன்சாய் ராகவேந்திரா, ஆர்.ஸ்ரீரஞ்சனி ஆகியோர் 476 மதிப்பெண்கள் பெற்று 3-வது இடமும் மற்றும் தமிழ் பாடத்தில் பி.நவீன் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனர். அவர்களை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.

முன்னதாக நீட், ஐ.ஐ.டி., ஜெ.இ.இ. தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் வகையில் பள்ளியில் டி.ஆர்.எஸ். பிரைட் மைன்ட்ஸ் அகாடமி தொடங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர். முடிவில் பள்ளி நிர்வாக அலுவலர் சுரேஷ் பாபு நன்றி கூறினார்.


Next Story