குறுவட்ட அளவிலான பெண்கள் கபடி போட்டி


குறுவட்ட அளவிலான பெண்கள் கபடி போட்டி
x

குறுவட்ட அளவிலான பெண்கள் கபடி போட்டி நடைபெற்றது.

புதுக்கோட்டை

கறம்பக்குடி:

கறம்பக்குடி அருகே குழந்திரான்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளியில் குறுவட்ட அளவில் 17 வயது உட்பட்ட மாணவிகளுக்கான கபடி போட்டி நடைபெற்றது. இதில் மழையூர், வெட்டன்விடுதி, ஆலங்குடி, பள்ளத்திவிடுதி, மாஞ்சான் விடுதி, ரெகுநாதபுரம், கறம்பக்குடி, அம்புக்கோவில், திருமணஞ்சேரி, பல்லவராயன்பத்தை, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அரசு பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர். இதில் ஆலங்குடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதல் பரிசு பெற்று கோப்பையை வென்றனர். மழையூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 2-ம் இடத்தையும், கறம்பக்குடி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 3-ம் இடத்தையும் பெற்றனர். மேலும் போட்டியில் முதல் 3 இடங்களை பெற்ற பள்ளிகளை சேர்ந்த மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டியில் விளையாட தகுதி பெற்றனர். தொடர்ந்து மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு ஊராட்சி தலைவர் வீரப்பன் தலைமை தாங்கினார். பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் கருப்பையா வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசு கோப்பைகளை வழங்கினார். போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவிகளுக்கும் பன்னீர் தேவர் அறக்கட்டளை சார்பில் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் மாவட்ட உடற்கல்வி அதிகாரி, உடற்கல்வி ஆசிரியர்கள், ஊர் பிரமுகர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி தலைமை ஆசிரியர் சிங்காரவேல் நன்றி கூறினார்.


Next Story