திருப்பூரில் காப்பகத்தில் 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட காப்பகம், சிகிச்சையில் உள்ள சிறுவர்களிடம் முதன்மை செயலாளர் மணிவாசன் நேற்று விசாரணை நடத்தினார்.

3 சிறுவர்கள் உயிரிழப்பு
திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டியில் ஸ்ரீவிவேகானந்த சேவாலயம் ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகத்தில் 18 வயதுக்கு உட்பட்ட 14 சிறுவர்கள் இருந்தனர். அவர்கள் அருகில் உள்ள பள்ளியில் படித்து வந்தனர். கடந்த 5-ந் தேதி காலை உணவு உட்கொண்ட மாணவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு, மயக்கம், காய்ச்சல் ஏற்பட்டது. இதில் 3 சிறுவர்கள் இறந்தனர். 11 சிறுவர்கள் மற்றும் காவலாளி ஆகியோர் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் நலமுடன் உள்ளனர்.
இதுதொடர்பாக விசாரணை அதிகாரியான பொதுப்பணித்துறை அரசு முதன்மை செயலாளர் மணிவாசன் தலைமையில் கலெக்டர் வினீத் முன்னிலையில் நேற்று திருமுருகன்பூண்டியில் உள்ள சம்பந்தப்பட்ட தனியார் காப்பகத்தில் உள்ள சமையல் அறை, சிறுவர்கள் தங்கும் அறை, படிக்கும் அறை, சிறுவர்கள் பயன்படுத்திய படுக்கை அறை மற்றும் அங்குள்ள பொருட்கள், கழிப்பிடம், அலுவலகம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சிறுவர்களிடம் விசாரணை
பின்னர் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள், உடல் நலம் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். சிறுவர்கள் ஒவ்வொருவரையும் சந்தித்து அவர்கள் சாப்பிட்ட உணவுகள், தற்போதைய உடல்நலம் ஆகியவற்றை தனித்தனியாக விசாரணை மேற்கொண்டார்.