சேர்ந்தபூமங்கலம் ஆரியநாச்சி அம்பாள் கோவில் வருசாபிஷேகம்
சேர்ந்தபூமங்கலம் ஆரியநாச்சி அம்பாள் கோவில் வருசாபிஷேகம் நடைபெற்றது.
தூத்துக்குடி
ஆறுமுகநேரி:
ஆத்தூர் அருகே உள்ள சேர்ந்தபூமங்கலம் சைவ வேளாளர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஆரியநாச்சிஅம்பாள் கோவிலில் வருசாபிஷேக விழா நேற்று காலையில் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து யாகசாலை பூஜைகள், மற்றும் வாஸ்துசாந்தி நடைபெற்றது. பின்னர் சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் ஓத கும்பத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு விமானங்களுக்கு அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து மூலவர் மற்றும் பரிவார தேவதைகளுக்கும் மகாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து உச்சிகால பூஜையும், தீபாராதனையும் நடைபெற்றது. மாலையில் அம்பாள் திருவீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story