தே..மு.தி.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
பழனி அருகே தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் விழாவையொட்டி கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
திண்டுக்கல் மேற்கு மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் சிவக்குமார் ஆலோசனைபேரில், பழனி அருகே மானூரில் கட்சியின் தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கு தொப்பம்பட்டி ஒன்றிய செயலாளர் தேன் பழனிசாமி தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் செல்லமுத்து முன்னிலை வகித்தார். இதையொட்டி கீரனூர் கண்டியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அதன்பிறகு தே.மு.தி.க. கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதேபோல் மானூர், கோரிக்கடவு உள்ளிட்ட பகுதிகளில் தே.மு.தி.க. கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
இந்த விழாவில் ஒன்றிய துணை செயலாளர்கள் மாரிமுத்து, சிவசங்கர், காளிமுத்து, மகேஸ்வரி, மாவட்ட பிரதிநிதிகள் பொன்ராஜ், முருகானந்தம், திருவாண்டைசாமி, ஒன்றிய இளைஞரணி செயலாளர் கார்த்திக்குமார், மானூர் கிளை நிர்வாகிகள் பொன்னுசாமி, புஷ்பராஜ், பெரியாண்டவர், புளியம்பட்டி நிர்வாகி சதீஷ் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.