உலக புள்ளியியல் தின கொண்டாட்டம்


உலக புள்ளியியல் தின கொண்டாட்டம்
x
தினத்தந்தி 21 Oct 2022 12:15 AM IST (Updated: 21 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் ஜி.டி.என். கல்லூரியில் உலக புள்ளியியல் தினம் கொண்டாடப்பட்டது.

திண்டுக்கல்

திண்டுக்கல் ஜி.டி.என். கலைக்கல்லூரியின் பொருளாதாரத்துறை, மாவட்ட புள்ளியியல் அலுவலகம் ஆகியவை சார்பில் உலக புள்ளியியல் தினம் கல்லூரி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. இதற்கு கல்லூரி முதல்வர் பாலகுருசாமி தலைமை தாங்கி பேசினார். பொருளாதாரத்துறை தலைவர் ரவிச்சந்திரன் உலக புள்ளியியல் தினத்தின் நோக்கம் குறித்து பேசினார். கல்லூரி தாளாளர் ரெத்தினம், இயக்குனர் துரை ரெத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


மாவட்ட புள்ளியியல் துறை இணை இயக்குனர் கருப்பையா, மத்திய, மாநில அரசுகளின் காப்பீட்டு நிறுவனங்கள், வங்கிகளில் இருக்கும் புள்ளியியல் துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் குறித்தும், அந்த பணி வாய்ப்பை எவ்வாறு பெற முடியும் என்பது குறித்தும் மாணவ-மாணவிகளுக்கு விளக்கமளித்தார்.


அதையடுத்து சென்னை அப்ளைடு டேட்டா பிளான்ஸ் நிறுவனத்தின் டேட்டா என்ஜினீயர் ஆதித்திய ஹர்சன், புள்ளியியல் எவ்வாறு தரவு அறிவியலுக்கு உதவியாக இருக்கிறது. உலக அளவில் வேலை வாய்ப்பை எவ்வாறு பெற்று தருகிறது என்பது குறித்து விளக்கி பேசினார். முடிவில் பொருளியல் துறை உதவி பேராசிரியர் அருண் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் 150-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.





Next Story