தொண்டியில் அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
தொண்டியில் அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்
தொண்டிதொண்டியில் அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததையொட்டி அ.தி.மு.க.வினர் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் ஆனிமுத்து, திருவாடானை ஒன்றிய செயலாளர் மதிவாணன் ஆகியோர் தலைமையில் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். ஒரியூர் நான்குமுனை சந்திப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அ.தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் சுப்பு, ஒன்றிய பொருளாளர் ஜெயராமன், செயலாளர் ஸ்ரீராம்ராமநாதன், தொண்டி நகரச் செயலாளர் காளிதாஸ், இ.எம்.சாகுல் ஹமீது, ஒன்றிய கவுன்சிலர் சசிகுமார், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர்கள் தளிர்மருங்கூர் சரவணன், பாண்டுகுடி பாலு, ஒன்றிய இளைஞர் பாசறை செயலாளர் ராம்குமார், பி.கே. மங்கலம் ராமநாதன், மாவட்ட அமைப்பு சாரா அணி தலைவர் முத்துராமலிங்கம், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி தலைவர் ராமமூர்த்தி, கட்டுகுடி ஆனந்த், ஆண்டிவயல் முருகன், ஆதியூர் கணேசன், உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.