அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
உடன்குடி பஜாரில் அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
உடன்குடி:
சென்னையில் நடந்த அ.தி.மு.க., பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதையொட்டி உடன்குடி, ஒன்றிய, நகர அ.தி.மு.க., சார்பில் உடன்குடி மெயின் பஜாரில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. உடன்குடி ஒன்றிய பொருளாளர் குலசை சங்கரலிங்கம் தலைமை தாங்கினார். தூத்துக்குடி தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி தலைவர் குணசேகரன் இனிப்பு வழங்கினார். இதில், உடன்குடி ஒன்றிய முன்னாள் இளைஞர் அணி செயலாளர் அமிர்தா மகேந்திரன், மாதவன் குறிச்சி பஞ்., தலைவர் சேர்மத்துரை, தெற்கு மாவட்ட இலக்கிய அணி தலைவர் பொன் ஸ்ரீராம், உடன்குடி நகர ஜெ., பேரவை செயலாளர் ரெங்கன், செட்டியா பத்து பஞ்சாயத்து துணைத் தலைவர் செல்வக்குமார், தலைமை கழக பேச்சாளர் மாநாடு பால்துரை, உடன்குடி ஒன்றிய மாணவரணி செயலாளர் சதீஷ், பொருளாளர் ராம்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.