அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
ஆறுமுகநேரியில் அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
தூத்துக்குடி
ஆறுமுகநேரி:
அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியதையொட்டி ஆறுமுகநேரி நகர அ.தி.மு.க. செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் ஆறுமுகநேரி பஜாரில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர்.
நிகழ்ச்சியில் நகர அவை தலைவர் கனகராஜ், முன்னாள் நகர செயலாளர்கள் அமிர்தராஜ், பெரியசாமி, நகரப்பஞ்சாயத்து கவுன்சிலர் சிவகுமார், முன்னாள் கவுன்சிலர் சந்திரன் மற்றும் வி.கே.எம்.மனோகரன், சுரேஷ், நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story