காங்கிரசார் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
ராகுல்காந்தி நடைபயணம் நிறைவு பெற்றதை தொடர்ந்து காங்கிரசார் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
பாலக்கோடு
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் கன்னியாகுமரியில் இருந்து தொடங்கி இந்தியா முழுவதும் சென்று ஜம்மு காஷ்மீரில் தேசியகொடி ஏற்றப்பட்டு நிறைவடைகிறது. இதை கொண்டாடும் வகையில் பாலக்கோடு ஸ்தூபி மைதானத்தில் காங்கிரஸ் நகர தலைவர் கணேசன் தலைமையில் முன்னாள் எம்.பி. தீர்த்தராமன் காங்கிரஸ் கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய பொதுச்செயலாளர்கள் சிலம்பரசன், ராஜேந்திரன், மாவட்ட விவசாயிகள் அணி தலைவர் அன்பழகன், மாவட்ட செயலாளர் பழனியப்பன், நகர செயலாளர் ரகமத்துல்லா, நகர துணைத் தலைவர் பாலாஜி குமார். முன்னாள் நகர தலைவர் சதாசிவம், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் நிசார்மைதீன், ஜெயராமன், மாவட்ட பொறுப்பாளர் பழனியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பென்னாகரம்
ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை நடைபயணம் நிறைவு பெற்றதையொட்டி பென்னாகரம் பழைய பஸ் நிலையம் அருகில் காங்கிரஸ் கட்சி கொடியேற்று விழா நடந்தது. வட்டார தலைவர் பெரியசாமி தலைமை தாங்கினார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பெருமாள் கவுண்டர் கலந்து கொண்டு காங்கிரஸ் கட்சி கொடியினை ஏற்றி வைத்தார்,
நிகழ்ச்சியில் ஐ.என்.டி.யூ.சி. செயற்குழு உறுப்பினர் வெங்கடாசலம், மாவட்ட இலக்கிய அணி தலவைர் முருகவாசன், மாவட்ட செயலாளர் நரேந்திரன், மாவட்ட சட்ட ஆலோசகர் லட்சுமி காந்தன், நகர செயலாளர் நாகராஜ், நகர தலைவர் சுப்பிரமணி, கர்ணன், வேலு கவுண்டர், ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பாப்பாரப்பட்டி
ராகுல்காந்தி நடைபயணம் நிறைவையொட்டி பாப்பாரப்பட்டி பகுதியில் காங்கிரஸ் கட்சி கொடியேற்று விழா நடந்தது. பள்ளிப்பட்டி கிராமத்தில் நடந்த கொடியேற்று விழாவுக்கு வட்டார தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணன் கொடியேற்றி வைத்தார். வேடியப்பன் முன்னிலை வகித்தார். முன்னாள் ஊராட்சி தலைவர் காவேரி, நிர்வாகிகள் கணேசன், சுந்தரம், பழனி, வடிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாதேஅள்ளி கிராமத்தில் நடந்த விழாவுக்கு வட்டார துணைத் தலைவர் மணி தலைமை தாங்கினார். நகர தலைவர் தங்கராஜ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகி சக்திவேல் கொடியேற்றி வைத்து இனிப்பு வழங்கினார். இதில் நிர்வாகிகள் நஞ்சப்பகவுண்டர், நாகராஜ் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர். ரத்தினம் நன்றி கூறினார்.