தேவர் ஜெயந்தி விழா கொண்டாட்டம்


தேவர் ஜெயந்தி விழா கொண்டாட்டம்
x
தினத்தந்தி 31 Oct 2022 12:15 AM IST (Updated: 31 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி பகுதியில் தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

அ.தி.மு.க.

கோவில்பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி சிலை நிறுவனர் இனாம் மணியாச்சி சோலையப்ப தேவர் குடும்பத்தினர் சிலை முன்பு அதிகாலையில் பொங்கலிட்டு, சிறப்பு வழிபாடு நடத்தினர். இதனை தொடர்ந்து அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமையில், நகரச் செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர் அன்புராஜ், கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் துணைத் தலைவர் பழனிச்சாமி, மாவட்ட பஞ்சாயத்து குழு உறுப்பினர் சத்யா மற்றும் நிர்வாகிகள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தி.மு.க.

நகர தி.மு.க. செயலாளரும், நகரசபை தலைவருமான கருணாநிதி தலைமையில், ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ் தலைமையில் மாவட்ட இளைஞரணி செயலாளர் விநாயகா ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பா.ஜனதா

பா.ஜனதா மாவட்ட தலைவர் வெங்கடேஷ் சென்னகேசவன் தலைமையில் மாவட்ட செயலாளர் வேல்ராஜா மற்றும் பலரும், தே.மு.தி.க.மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமையிலும், மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆர். காமராஜர் தலைமையிலும், த.மா.கா. சார்பில் நகர தலைவர் ராஜகோபால் தலைமையிலும்,

தமிழ் பேரரசு கட்சி சார்பில் ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமையிலும், கோவில்பட்டி சைவ வேளாளர் சங்க தலைவர் தெய்வேந்திரன் தலைமையிலும் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

பால்குட ஊர்வலம்

அகில இந்திய தேவர் இன மக்கள் கூட்டமைப்பு நிறுவனர் அண்ணாதுரை தலைமையில் இலுப்பை யூரணியில் இருந்து 1115 பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்று சிலைக்கு வழிபாடு நடத்தினர். இனாம் மணியாச்சி தேவரின மக்கள், இளைஞர் அணி ஏற்பாட்டில் பெண்கள் 501 பால் குடம் எடுத்து ஊர்வலமாக வந்து தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

வீரவாஞ்சி நகர் தேவரின மக்கள், இளைஞர் அணியினர் ஏற்பாட்டில் 401 பெண்கள் 401 பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து, தேவர் சிலை முன்பு மரியாதை செலுத்தினா்.

சரமாரி அம்மன் கோவில் தெரு தேவரின மக்கள் 301 பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினா்்.

விளாத்திகுளம்

விளாத்திகுளம் அருகே உள்ள மீனாட்சிபுரம், புளியங்குளம், ஆகிய கிராமங்களில் தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. பசும்பொன் தேசிய கழக பொறுப்பாளர் பரமசிவம் தலைமை தாங்கினார். விழாவில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

விளாத்திகுளம் தி.மு.க மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் அய்யன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து விளாத்திகுளம் பாரதியார் பஸ்நிலையம் முன்பு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேவர் உருவபடத்திற்கு எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். எட்டயபுரம் தெற்கு தெருவில் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு பால்குட ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து, தேவரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் நவநீத கண்ணன், எட்டயபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன், விளாத்திகுளம் ஒன்றிய செயலாளர் சின்ன மாரிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர். பின்னர் இளம்புவனம் கிராமத்தில் தேவர் உருவசிலைக்கு எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ஓட்டப்பிடாரம்- ஸ்ரீவைகுண்டம்

ஓட்டப்பிடாரம் அருகே பசுவந்தனை கைலாசநாதர் கோவிலில் பொம்மையாபுரம் கிராம பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அங்கிருந்து 108 பால்குடங்கள் எடுத்து ஊர்வலமாக சென்று பொம்மையாபுரத்திலுள்ள்ள தேவரின் உருவச்சிலைக்கு பாலாபிஷேகம் செய்தனர். பின்னர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ஸ்ரீவைகுண்டத்தில் அமைந்துள்ள தேவர் சிலைக்கு கெட்டியம்மாள்புரம் ஏ.ஆர்.தேவர் மகன் வழக்கறிஞர் ஏ.ஆர்.ரகுராமையா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். விழாவில் ஸ்ரீவைகுண்டம் ராஜ் தேவர், பெரும்பத்து பெருமாள் தேவர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

கழுகுமலை

கழுகுமலையில் பா.ஜனதா சார்பில் மாவட்ட துணை தலைவர் ராஜேந்திரன் தலைமையில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கயத்தாறு மேற்கு ஒன்றிய தலைவர் ஜெகதீஷ், ஒன்றிய துணை தலைவர்கள் மதி ராஜசேகரன், முத்துராமலிங்கம், ஒன்றிய பொதுச் செயலாளர் சதீஷ், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு பரமசிவன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல் பா.ஜனதா முன்னாள் மாவட்ட இளைஞரணி செயலாளர் செல்வம் தலைமையில் பாலகணேஷ், மாடசாமி, சுரேஷ் மற்றும் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கழுகுமலை நகர அ.தி.மு.க. சார்பில் முருகன் கோவில் மேலவாசல் முன்புறம் உள்ள தேவர் சிலைக்கு நகர அ.தி.மு.க. செயலாளர் முத்துராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் நகர இளைஞரணி செயலாளரும், ஸ்ரீ முருகன் கூட்டுறவு பண்டகசாலை தலைவருமான கருப்பசாமி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு ஸ்ரீதர் ஆகியோர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

கழுகுமலை அருகே சிதம்பராபுரத்தில் உள்ள தேவர் சிலைக்கு களப்பாளங்குளம் பஞ்சாயத்து தலைவர் ஜெய்சங்கர் மாலை அணிவித்து மரியாைத செலுத்தினார். தொடர்ந்து சிதம்பராபுரம் ஊர் நாட்டாமை ராமகிருஷ்ணன், அய்யாபுரம் ஊர் நாட்டாமைகள் மாரிக்கண்ணன், மாடசாமி மற்றும் ஹரிகரன், கணேசன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அய்யாபுரம் கிராமத்தில் இருந்து சிதம்பராபுரம் வரை பால்குடம் எடுத்து பொதுமக்கள் ஊர்வலமாக வந்தனர். அதை தொடர்ந்து பாலாபிஷேகம் நடந்தது. பின்னர் சமுதாய கொடி ஏற்றப்பட்டது.


Next Story