சுதந்திரதின விழா கொண்டாட்டம்
உளுந்தூர்பேட்டை பகுதியில் சுதந்திரதின விழா கொண்டாட்டம்
உளுந்தூர்பேட்டை
உளுந்தூர்பேட்டையில் கடந்த 1947-ம் ஆண்டு சுதந்திர தினத்தின் போது கட்டப்பட்ட மணிக்கூண்டு புதுப்பிக்கப்பட்டு அதற்கான திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதுப்பிக்கப்பட்ட மணிக்கூண்டு மற்றும் காந்தி சிலையை திறந்து வைத்து தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். இ்தில் நகர முன்னாள் செயலாளர் செல்லைய்யா, ஒன்றிய முன்னாள் செயலாளர் விஜயகுமார், கவுன்சிலர்கள் கலா, குமரவேல், சரவணன், கோபி, தினேஷ்பாபு உள்பட பலர் கலந்துகொண்டனர்.
அதேபோல் உளுந்தூர்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திரதின விழாவில் நகராட்சி தலைவர் திருநாவுக்கரசு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில் துணை தலைவர் வைத்தியநாதன், கவுன்சிலர்கள் டேனியல்ராஜ், ஜெய்சங்கர், மாலதி, ராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் ஒன்றியக்குழு தலைவர் ராஜவேல் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவிசங்கர், சீனிவாசன், கவுன்சிலர்கள் மதியழகன், ரமேஷ்பாபு, சந்திரகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.