மேல்பாடி அரசு ஆரம்பப் பள்ளியில் உலக தாய்மொழி தின விழா
மேல்பாடி அரசு ஆரம்பப் பள்ளியில் உலக தாய்மொழி தின விழா நடந்தது.
மேல்பாடி
மேல்பாடி அரசு ஆரம்பப் பள்ளியில் உலக தாய்மொழி தின விழா நடந்தது.
-காட்பாடி தாலுகா மேல்பாடியில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் நேற்று உலக தாய்மொழி தின விழா நடந்தது. விழாவுக்கு தலைமை ஆசிரியை ரஜினி தலைமை தாங்கினார்.
விழாவில் தாய்மொழியான தமிழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் தமிழ் எழுத்தின் முதல் எழுத்தான 'த' எழுத்து வடிவில் மாணவ, மாணவிகள் அமரவைக்கப்பட்டனர்.அப்போது தலைமை ஆசிரியை ரஜினி பேசுகையில், ''மாணவ, மாணவிகளிடம் அவர் பேசுகையில், ''தமிழர்களாகிய நாம் எத்தனை மொழிகள் பயின்றாலும் நமது சிந்தனை எப்போதும் தாய்மொழியில் மட்டுமே இருக்க வேண்டும.் நம் குழந்தைச் செல்வங்களை தமிழிலேயே படிக்க வைத்து தமிழின் பெருமைகளை கற்றுத் தர வேண்டும்'' என்றார்.
இதில் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் இதில் கலந்து கொண்டனர்..