போலீஸ் போல் நடித்து செல்போன் கடையில் மோசடி செய்தவர் கைது
ஆலங்குளம் அருகே போலீஸ் போல் நடித்து செல்போன் கடையில் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.
தென்காசி
ஆலங்குளம்:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பூலாங்குளம் கிராமத்தில் ராஜேஷ் என்பவர் செல்போன் கடை வைத்துள்ளார். இவரது கடைக்கு ஒருவர் செல்போன் வாங்க வந்துள்ளார். அப்போது அவர் தன்னை போலீஸ் என்றும் அறிமுகமாகி புதிய செல்போன் வாங்கியுள்ளார். பின்னர் செல்போனுக்கான பணத்தை கூகுள்பே மூலம் அனுப்புவதாக கூறி விட்டு அங்கிருந்து சென்றார்.
நீண்ட நேரமாகியும் செல்போன் வாங்கியவர் பணம் அனுப்பாததால் பதறிப்போன ராஜேஷ், இதுபற்றி ஆலங்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ஆலங்குளம் அருகே மருதம்புத்தூரை சேர்ந்த பிரதீப் என்ற ஷாம் சுந்தர் (வயது 38) தன்னை போலீஸ் எனக்கூறி மோசடி செய்தது தெரியவந்தது. உடனே அவரை கைது செய்த போலீசார் ஆலங்குளம் நடுவர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story