கைதியிடம் செல்போன் பறிமுதல்
சேலம்
சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ள சில கைதிகள் செல்போன் பயன்படுத்தப்படுவதாக வரும் புகாரின் அடிப்படையில் சிறை காவலர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு 3 கைதிகள் ஆசன வாயில் மறைத்து வைத்து இருந்த செல்போன் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து நேற்றும் சிறைக்காவலர்கள் சோதனை நடத்தினர். அப்போது ஆயுள் தண்டனை பெற்ற கைதி கோரிமேட்டை சேர்ந்த பிரகாஷ் என்பவர் அடைக்கப்பட்டு உள்ள அறையில் சோதனை நடத்தினர். அவர் செல்போன் வைத்து இருப்பது தெரிந்தது. செல்போனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது குறித்த புகாரின் பேரில் அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
Next Story