செல்போன் கடையில் திருடியவர் கைது


செல்போன் கடையில் திருடியவர் கைது
x

வடக்கன்குளத்தில் செல்போன் கடையில் திருடியவர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

வடக்கன்குளம்:

வடக்கன்குளம் பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்தவர் அந்தோணி பெலிக்ஸ். இவர் வடக்கன்குளம் மெயின் ரோட்டில் செல்போன் மற்றும் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். கடந்த 10-ந்தேதி இரவு செல்போன் கடை ஷட்டரின் பூட்டை உடைத்து, கடையில் இருந்த ரூ.50 ஆயிரம் மதிப்பிலான செல்போன், உதிரிபாகங்களை மர்மநபர் திருடிச் சென்றார்.

இதுகுறித்த புகாரின் பேரில், பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், செல்போன் கடையில் திருடியது பணகுடியை சேர்ந்த முருகன் மகன் சுதன் (வயது 25) என்பது தெரியவந்தது. அவரை ேபாலீசார் கைது செய்து, அவர் திருடிய பொருட்களையும் மீட்டனர்.


Next Story