செல்போன் திருடிய 2 பேர் கைது


செல்போன் திருடிய 2 பேர் கைது
x

செல்போன் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி

திருச்சி டவுன்ஸ்டேஷன்ரோடு ரெங்கநாதன் தோப்பு பகுதியை சேர்ந்தவர் முரளி (வயது 47). இவர் சம்பவத்தன்று ராமகிருஷ்ணா பாலம் அருகே தனது சைக்கிளை நிறுத்திவிட்டு நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் அவரிடம் இருந்து செல்போனை திருடி கொண்டு தப்பி ஓடினர். இது குறித்த புகாரின்பேரில் காந்திமார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து, செல்போன் திருடியதாக இ.பி.ரோடு பகுதியை சேர்ந்த குணசீலன் (22), தாராநல்லூரை சேர்ந்த சீனிவாசன் (28) ஆகியோரை கைது செய்தனர்.


Next Story