பயிற்சி டாக்டரிடம் செல்போன் திருடியவர் கைது
பயிற்சி டாக்டரிடம் செல்போன் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி
கோவை கிணத்துக்கடவுவை சேர்ந்தவர் ஹிசாரா பாத்திமா (வயது 20). இவர் திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் பயிற்சி டாக்டராக பணிபுரிந்து வருகிறாா். சம்பவத்தன்று இவர் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி பஸ்நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார்.
அப்போது, அங்கு வந்த திருச்சி பாலக்கரையை சேர்ந்த பழனிசாமி(42) என்பவர் ஹிசாரா பாத்திமாவின் செல்போனை திருடி சென்றுவிட்டதாகத்தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் அரசு மருத்துவமனை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனிசாமியை கைது செய்தனர்.
Related Tags :
Next Story