2 பேரிடம் செல்போன் பறிப்பு


2 பேரிடம் செல்போன் பறிப்பு
x

2 பேரிடம் செல்போன் பறித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

திருநெல்வேலி

மேலப்பாளையம்:

நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்த பெண் ஒருவர் நேற்று முன்தினம் தெற்கு புறவழிச்சாலை ரவுண்டானா பகுதியில் நடந்து சென்றார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர், பெண் கையில் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டார்.

இதேபோல் வண்ணார்பேட்டையை சேர்ந்த ஓட்டல் தொழிலாளி குறிச்சி வாய்க்கால் பாலம் அருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அவரிடமும் மர்ம நபர் செல்போனை பறித்துச்சென்று விட்டார்.

இதுகுறித்து மேலப்பாளையம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.


Next Story