கடையின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் செல்போன்கள் திருட்டு


கடையின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் செல்போன்கள் திருட்டு
x

தலைஞாயிறு அருகே கடையின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் செல்போன்கள் திருட்டு மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்

நாகப்பட்டினம்

வாய்மேடு:

நாகை மாவட்டம், தலைஞாயிறை அடுத்த நீர்மூளை பகுதியைச் சேர்ந்தவர் அருள் (வயது 29). இவர் நீர்மூளை கடைத்தெருவில் செல்போன் உதிரி பாகங்கள் விற்பனை மற்றும் லேப்டாப், செல்போன் சர்வீஸ் நிலையம் வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றிருந்தார். அடுத்தநாள் காலை கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டுகள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தன. உள்ளே சென்று பார்த்தபோது அங்கு வைக்கப்பட்டு இருந்து செல்போன்கள், செல்போன் உதிரி பாகங்கள் மற்றும் ரூ.10 ஆயிரம் ஆகியவை திருட்டு போய் இருந்தது கண்டு திடுக்கிட்டார். இதுகுறித்து தலைஞாயிறு போலீசாருக்கு அருள் தகவல் கொடுத்தார். அதன்பேரில், ேபாலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். நாகையில் இருந்து கைரேகை நிபுணர்கள் வந்து மர்ம நபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் தலைஞாயிறு போலீசார் வழக்குப் பதிவு செய்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story