செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்திய பெண்
செல்போன் கோபுரத்தில் ஏறி
போராட்டம் நடத்திய பெண்செல்போன் கோபுரத்தில் ஏறி
போராட்டம் நடத்திய பெண்
கோவை மாவட்டம் சூலூரை சேர்ந்தவர் மல்லிகா (வயது40). இவரது தம்பி சுப்பிரமணி (35). இவர்கள் சொந்தமாக பொக்லைன் எந்திரம் வைத்துள்ளனர். இந்த பொக்லைன் எந்திரத்தை தனியார் தொலைபேசி நிறுவனத்திற்கு வாடகைக்கு ஒப்பந்தத்திற்கு விட்டுள்ளனர். இதையடுத்து தனியார் தொலைபேசி நிறுவனம் காரணம்பேட்டையில் இருந்து மங்கலம் அக்ரஹாரப்புத்தூர் வரை கேபிள் பதிக்கும் பணிக்கு அந்த பொக்லைன் எந்திரத்ைத பயன்படுத்தி உள்ளனர்.
இந்த நிலையில் பொக்லைன் எந்திரம் வாடகை தொடர்பாக மல்லிகாவுக்கும், ஒப்பந்ததாரருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் ஒப்பந்ததாரர் வழங்க வேண்டிய வாடகைப் பணத்தை வழங்க நடவடிக்கை எடுக்க கோரி நேற்று காலை 10 மணிக்கு அக்ரஹாரப்புத்தூர் பகுதியில் உள்ள தனியார் செல்போன் கோபுரத்தின் மீது ஏறி நின்று மல்லிகா போராட்டத்தில் ஈடுபட்டார். இது பற்றி தகவல் அறிந்ததும் பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் மங்கலம் போலீசார் மற்றும் பல்லடம் தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து செல்போன் கோபுரம் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட மல்லிகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக இறங்க மல்லிகா சம்மதிக்கவில்லை பின்னர் மல்லிகாவிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததைத் தொடர்ந்து மல்லிகா கீழே இறங்கி வந்தார்.இச்சம்பத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.