தூக்கணாம்பாக்கத்தில் தொகுப்பு வீட்டில் பெயர்ந்து விழுந்த சிமெண்டு காரைகள் மூதாட்டி காயம்


தூக்கணாம்பாக்கத்தில்    தொகுப்பு வீட்டில் பெயர்ந்து விழுந்த சிமெண்டு காரைகள்    மூதாட்டி காயம்
x
தினத்தந்தி 12 Dec 2022 12:15 AM IST (Updated: 12 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

தூக்கணாம்பாக்கத்தில் தொகுப்பு வீட்டில் சிமெண்டு காரைகள் பெயா்ந்து விழுந்து மூதாட்டி காயமடைந்தாா்.

கடலூர்


தூக்கணாம்பாக்கம்,

கடலூர் அடுத்த தூக்கணாம்பாக்கம் அழகிய நத்தம் காலனியை சேர்ந்தவர் ஆதிலட்சுமி (வயது 70). அரசு கட்டிக்கொடுத்த தொகுப்பு வீட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு அவர் வீட்டில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தார்.

தற்போது பெய்த தொடர் மழையால், திடீரென வீட்டின் மேற்கூரையில் இருந்த சிமெண்டு காரைகள் பெயர்ந்து ஆதிலட்சுமி மீது விழுந்தது. அப்போது சத்தம் போடவே, அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து, அவரை மீட்டனர். இதில் ஆதிலட்சுமிக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது குறித்து தூக்கணாம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story