ரூ.17¾ லட்சத்தில் சிமெண்டு சாலை, கழிவுநீர் கால்வாய்
சித்தூர் கிராமத்தில் ரூ.17¾ லட்சத்தில் சிமெண்டு சாலை, கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை ஒன்றியக்குழு தலைவர் ஆய்வு செய்தார்.
ராணிப்பேட்டை
நெமிலி ஊராட்சி ஒன்றிய நிதியிலிருந்து சித்தூர் கிராமத்தில் ரூ.17 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பீட்டில் சிமெண்டு சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இப்பணியை நெமிலி ஒன்றியக் குழு தலைவர் பெ.வடிவேலு பார்வையிட்டு, பணிகளை தரமாகவும், விரைந்துமுடிக்கவும் உத்தரவிட்டார்.
பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று சாலை அமைக்க ஏற்பாடு செய்த அவருக்கு சித்தூர் கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.
அப்போது சித்தூர் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கட்ரமணன், ஒன்றியக்குழு உறுப்பினர் விநாயகம், பாண்டியன், சங்கர், ஜெயச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story