ரூ.23 லட்சத்தில் சிமெண்டு சாலை, அரசு பள்ளிக்கு கழிவறை


ரூ.23 லட்சத்தில் சிமெண்டு சாலை, அரசு பள்ளிக்கு கழிவறை
x

ரூ.23 லட்சத்தில் சிமெண்டு சாலை, அரசு பள்ளிக்கு கழிவறை அமைக்கும் பணியை நல்லதம்பி எம்.எல்.ஏ. தொடங்கிவைத்தார்.

திருப்பத்தூர்

கந்திலி ஒன்றியம் ஆதியூர் ஊராட்சியில் ஆதியூர் ஆதிதிராவிடர் பகுதியில் புதிதாக சிமெண்டு சாலை அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் நல்லதம்பி எம்.எல்.ஏ. தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கியிருந்தார். மேலும் ஆதியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கழிவறை கட்டிடம், புளியந்தோப்பு பகுதியில் புதிதாக பேவர் பிளாக் தளம் அமைக்க மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் கே.எ.குணசேகரன் தனது மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.13.5 லட்சம் நிதி ஒதுக்கினார்.

அதைத்தொடர்ந்து இந்த பணிகளுக்கான பூமி பூஜை அந்தந்த பகுதிகளில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான கே.ஏ.குணசேகரன் தலைமை வகித்தார். அவைத் தலைவர் ஆசிரியர் ஜெகதீசன் வரவேற்றார். கூட்டுறவு சங்க இயக்குனர்கள் வக்கீல் மாது, ஆர்வில், சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிய சிமெண்டு சாலை மற்றும் பள்ளிக்கு கழிப்பறை கட்டிடம் ஆகிய பணிகளுக்கு நல்லதம்பி எம்.எல்.ஏ. பூமி பூஜை போட்டு தொடங்கி வைத்து பேசினார்.

நிகழ்ச்சியில் கந்திலி ஒன்றியக் குழு தலைவர் திருமதி திருமுருகன், துணைத் தலைவர் ஜி.மோகன் குமார உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். சக்கரவர்த்தி, செந்தில், அப்பாதுரை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


Next Story