சிமெண்டு விற்பனை நிலையம் அமைக்க மானியம்


சிமெண்டு விற்பனை நிலையம் அமைக்க மானியம்
x

சிமெண்டு விற்பனை நிலையம் அமைக்க மானியம்

திருப்பூர்

திருப்பூர்

தாட்கோ திட்டத்தில் தமிழ்நாடு சிமெண்டு கழகத்தின் விற்பனை முகவராக ரூ.3 கோடி மதிப்பில் சிமெண்டு விற்பனை நிலையம் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் தாட்கோ திட்டத்தின் மூலம் ஆதிதிராவிட இனத்தை சேர்ந்த 2 பேருக்கு ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் மானியமும், பழங்குடியின இனத்தை சேர்ந்த ஒருவருக்கு ரூ.90 ஆயிரம் மானியமும் வழங்கப்பட உள்ளது. விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து தேர்வு குழு மூலம் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரருக்கு தாட்கோ மூலம் ரூ.5 ஆயிரம் வைப்புத்தொகை TANCEM நிறுவனத்துக்கு செலுத்தப்படும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சிமெண்டு விற்பனை செய்வதற்கான வழிமுறைகள், வியாபார உத்திகள், கொள்முதல் செய்வோரை அணுகுமுறை உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தாட்கோ மேலாளரை 0421 2971112 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

----


Next Story