தேசிய நெடுஞ்சாலையில் போடப்பட்ட கற்களால் விபத்து ஏற்படும் அபாயம்


தேசிய நெடுஞ்சாலையில் போடப்பட்ட கற்களால் விபத்து ஏற்படும் அபாயம்
x
திருப்பூர்


வி.மேட்டுப்பாளையம் அருகே வெள்ளகோவில்-ஈரோடு சாலையில் மாந்தபுரத்தில் காவிரி கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு இருந்தது. அதை சரிசெய்வதற்காக பள்ளம் தோண்டிய போது எடுக்கப்பட்ட கற்களை ரோட்டில் போட்டுவிட்டு சென்றனர். இரவு நேரங்களில் எதிரே வரும் வாகன வெளிச்சத்தில் ரோட்டில் போடப்பட்டுள்ள கற்கள் வாகன ஓட்டிகளுக்கு தெரிவது இல்லை. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கற்களை அப்பகுதியில் இருந்து அகற்ற வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்ைக விடுத்துள்ளனர்.


Next Story