மத்திய, மாநில அரசு திட்டங்கள் கிராமங்களை சென்றுசேர வேண்டும்
மத்திய, மாநில அரசு திட்டங்கள் கிராமங்களை சென்றுசேர வேண்டும் என்று கண்காணிப்பு குழு கூட்டத்தில் ஜெகத்ரட்சகன் எம்.பி. கூறினார்.
ராணிப்பேட்டை
மத்திய, மாநில அரசு திட்டங்கள் கிராமங்களை சென்றுசேர வேண்டும் என்று கண்காணிப்பு குழு கூட்டத்தில் ஜெகத்ரட்சகன் எம்.பி. கூறினார்.
கண்காணிப்பு குழு கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் மாவட்ட கண்காணிப்பு குழு தலைவர் ஜெகத்ரட்சகன் எம்.பி. தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் பேசியதாவது:-
கிராமங்களை சென்றுசேர வேண்டும்
மத்திய மற்றும் மாநில அரசுகள் செயல்படுத்தும் அனைத்து திட்டங்களும் ஒவ்வொரு கிராமங்களையும் சென்று சேர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பின்னர் ராணிப்பேட்டை மாவட்டத்தில் மத்திய அரசின் நிதியின் மூலம் செயல்படுத்தப் பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகளில் தற்போதைய நிலைகள் குறித்தும், ஆண்டு இலக்குகள் மற்றும் செயல்படுத்தப்பட்டுள்ள பணிகள் குறித்தும் ஜெகத்ரட்சகன் எம்.பி. கேட்டறிந்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
பயன்பெறுவார்கள்
கிராமப்புறங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் 100 நாள் வேலைத் திட்ட பணிகள் கிராமப்புறங்களில் உள்ள ஏழை, எளிய மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையான திட்டமாகும். இத்திட்டத்தின்கீழ் பணிபுரியும் பணியாளர்களை முறையான பணிகளில் ஈடுபடுத்த வேண்டும். இதுபோன்று கிராமத்தின் வளர்ச்சிக்கு உகந்த தொழில்களில் ஈடுபடுத்தி அவர்கள் செய்யும் தொழில்களுக்கு ஊதியம் வழங்கினால் இத்திட்டத்தின் மூலம் பொதுமக்களும் பயன் பெறுவார்கள். கிராமமும் வளர்ச்சி அடையும். 3 மாதத்திற்கு ஒருமுறை இது மாதிரியான கூட்டம் நடத்தி திட்டங்களை விவாதித்து மக்களுக்கு பயனுள்ள வகையில் திட்டங்கள் செயல்படுத்த வேண்டும் என்றார்.
கூட்டத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன், ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, மகளிர் திட்ட இயக்குனர் நானில தாசன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, ஒன்றியக்குழு தலைவர்கள், நகரமன்ற தலைவர்கள், பேரூராட்சி மன்றத் தலைவர்கள், அனைத்து துறை அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.