மியான்மர்,தாய்லாந்தில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்க மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் - டிடிவி தினகரன்
மியான்மர்,தாய்லாந்தில் சட்ட விரோத கும்பலிடம் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
மியான்மர்,தாய்லாந்தில் சட்ட விரோத கும்பலிடம் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
"வெளிநாட்டு வேலைக்குச் சென்று மியன்மார் மற்றும் தாய்லாந்தில் சட்ட விரோத கும்பலிடம் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் அனைவரையும் பாதுகாப்பாக மீட்பதற்கு உரிய நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
சித்ரவதைக்கு ஆளான தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் பேசும் காணொளியைப் பார்க்கும்போது மிகுந்த வேதனை ஏற்படுகிறது. அதனால்தான், வெளி நாட்டு வேலைகளில் தமிழர்கள் யாரும் ஏமாற்றப்படாமல் இருப்பதற்கு சரியான வழிமுறைகளை வகுத்திட வேண்டுமென்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை பெயரளவிற்கு மட்டுமில்லாமல், செயல்படக்கூடியதாகவும் இருப்பது அவசியமாகும்." என்று தெரிவித்துள்ளார்.