மத்திய பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம்
கடையத்தில் மத்திய பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் நடந்தது.
கடையம்:
கடையம் சின்னத்தேர் திடலில், விவசாய சங்கம், விவசாய ெதாழிலாளர் சங்கம் சார்பில் மத்திய பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. விவசாய சங்க மாவட்ட துணை தலைவர் முத்துராஜன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன் கண்டன உரையாற்றினார். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினார்.
மத்திய அரசின் மக்கள் விரோத, விவசாயிகள் விரோத பட்ஜெட்டை கண்டித்தும், விவசாய விளைபொருட்களுக்கு ஆதார விலை வழங்க வேண்டும், 100 நாள் வேலைக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த போராட்டத்தில் விவசாய சங்க ஒன்றிய பொருளாளர் ஆறுமுகம், சம்மன்குளம் செயலாளர் சேகர், சங்க ஒன்றியக்குழு உறுப்பினர் ஜெயராஜ், சம்மன்குளம் கிளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் செந்தில்வேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.