அட்மா திட்ட செயல்பாடுகள் குறித்து மத்திய குழு ஆய்வு


அட்மா திட்ட செயல்பாடுகள் குறித்து மத்திய குழு ஆய்வு
x

திருவண்ணாமலை மாவட்டத்தில் அட்மா திட்ட செயல்பாடுகள் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் வேளாண்மை-உழவர் நலத்துறையின் கீழ் இயங்கும் அட்மா திட்ட செயல்பாடுகள் குறித்து தேசிய வேளாண்மை விரிவாக்க மேலாண்மை நிறுவன இயக்குனர் பாலசுப்பிரமணி மற்றும் மத்திய குழுவினர் கடலாடி கிராமத்தில் பண்ணை குட்டையில் மீன் வளர்ப்பு குறித்தும், அருணகிரி மங்கலம் கிராமத்தில் தென்னை மரம் ஏறும் கருவி குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும் மோட்டூர் கிராமத்தில் சிறுதானியங்களில் மதிப்பு கூட்டுதல் செய்து வரும் முன்னோடி விவசாயிகளிடம் ஆய்வு, அத்திமூர் கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மூலம் தொகுப்பு தரிசு நில மேம்பாடு மற்றும் அட்மா திட்டத்தின் மூலம் பயனடைந்த விவசாயிகளின் வயல்களை ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட பயனாளிகளிடம் கலந்துரையாடினர். மேலும் திட்ட செயல்பாடுகள் மூலம் அறிந்து கொண்ட தொழில்நுட்பங்கள் நடைமுறைப்படுத்துதல் குறித்து விவசாயிகளிடையே கேட்டறிந்தார்.

ஆய்வின் போது பயிற்சி கலெக்டர் ரஷ்மி ராணி, வேளாண்மை இணை இயக்குனர் அரக்குமார், வேளாண்மை துணை இயக்குனர் (உழவர் பயிற்சி நிலையம்) ராமநாதன், வேளாண்மை உதவி இயக்குனர்கள் சரவணன், பழனி, சவிதா, சவுந்தர் உள்பட அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.


Next Story