ஜல் சக்தி அபியான் திட்ட பணிகள் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு
அகனி, காவிரி பூம்பட்டினம் ஊராட்சிகளில் ஜல் சக்தி அபியான் திட்ட பணிகள் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.
திருவெண்காடு:
மத்திய அரசின் திட்டமான ஜல் சக்தி அபியான் திட்ட பணிகளான மழைநீர் சேகரிப்பு திட்டம் மற்றும் மரக்கன்று வளர்ப்பு திட்டம் ஆகியவை சீர்காழி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சிகளில் நடைபெற்று வருகிறது. இந்த திட்ட பணிகள் செயல்பாடுகள் குறித்து மத்திய ஜவுளித்துறை துணைச் செயலாளர் சுக்லா மற்றும் பூனே ஆராய்ச்சி நிறுவனத்தின் தொழில்நுட்ப அலுவலர் சவுபே பாபு பாலா சாகிப் ஆகியோர் கொண்ட மத்திய குழுவினர் நேற்று அகனி ஊராட்சியில் ஆய்வு செய்தனர். மரக்கன்று வளர்ப்பு, தூர்வாரப்பட்ட குளம், குடிநீர் இணைப்பு பணிகள் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்தனர். இதேபோல் காவேரி பூம்பட்டினம் ஊராட்சியில் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணை இயக்குனர் ஸ்ரீலேகா, தமிழ் செல்வன், சீர்காழி ஒன்றிய ஆணையர் இளங்கோவன், வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், ஒன்றிய பொறியாளர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.