அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல்லின் ஈரப்பதத்தை மத்திய குழுவினர் ஆய்வு
மயிலாடுதுறை பகுதியில் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல்லின் ஈரப்பதத்தை மத்திய குழுவினர் ஆய்வு செய்து விவசாயிகளிடம் கருத்துகளை கேட்டறிந்தனர்.
மயிலாடுதுறை பகுதியில் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல்லின் ஈரப்பதத்தை மத்திய குழுவினர் ஆய்வு செய்து விவசாயிகளிடம் கருத்துகளை கேட்டறிந்தனர்.
மத்திய குழுவினர் ஆய்வு
மயிலாடுதுறை அருகே பாண்டூர், மணல்மேடு பகுதிகளில் உள்ள நேரடிநெல் கொள்முதல் நிலையங்களில் நெல் ஈரப்பதத்தினை மத்திய உணவுகழகத்தின் சேமிப்பு மற்றும் ஆய்வுதரக்கட்டுப்பாடு மைய துணை இயக்குனர் இசட்.கான் தலைமையில் இந்திய உணவுக் கழகம் தரக் கட்டுப்பாடு பிரிவு தொழில் நுட்ப அலுவலர் யூனிஸ், இந்திய உணவுகழகம் தரக் கட்டுப்பாடு உதவி பொதுமேலாளர் குணால்குமார், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தரக்கட்டுப்பாடு முதுநிலை மண்டலமேலாளர் செந்தில் ஆகியோர் அடங்கிய மத்திய குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது மத்திய குழுவினருக்கு, மாவட்ட கலெக்டர் லலிதா நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லின் தரம் குறித்தும், விவசாயிகளின் நிலை குறித்தும் விளக்கி கூறினார்.
விவசாயிகளிடம் கருத்துகளை கேட்டறிந்தனர்
மேலும் நேரடிகொள்முதல் நிலையத்தில் நெல்லின் ஈரப்பதம் தொடர்பாக விவசாயிகளிடம் கருத்துக்களை மத்தியகுழுவினர் கேட்டறிந்தனர்.இந்த ஆய்வின்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டலமேலாளர் உமாமகேஸ்வரி, துணை மேலாளர் (தரக்கட்டுப்பாடு) மருதநாயகம் விவசாயிகள் மற்றும் அரசுஅலுவலர்கள் உடனிருந்தனர்.